Dear Friends, With all your wishes and support! Vels Arena of Cricket is now VelsArena.com Welcome and Extend your patronage to the site! Thank You!

Vels Arena

Vels Arena
Vels Cricket Arangam is now VelsArena.com

கோயம்புத்தூர் கிரிக்கெட் -2 வது பிரிவு

தயவு செய்து  தனியுரிமை மற்றும் நிபந்தனைகள்  படித்து விட்டுத் தொடரவும்!!!


கோயம்புத்தூர் கிரிக்கெட்


யூனி டிரைவ் லைன் ட்ராபி -2 வது பிரிவு 

கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்க சின்னம்
CDCA

TNCA - CDCA 2வது பிரிவு லீக் போட்டி :
கோவை  PSG IMS 'A' மைதானத்தில் இன்று (23.06.2013), முதலில் பேட் செய்த ரெயின்போ 1972 MMCC அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. S. கார்த்திக் 78 ரன்களும், M. கார்த்திக் பிரபு 39 ரன்களும் எடுத்தனர். V. கௌதம் 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது பேட் செய்த கோயம்புத்தூர் ரைடர்ஸ் அணி 39 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 106 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. அதிக பட்சமாக K. சரவண குமார் 33 ரன்கள் எடுத்தார். V. பரணி குமார் 23 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களையும், K. மதன் 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.


முடிவு: ரெயின்போ 1972 MMCC அணி வெற்றி!!!



பதிப்பாசிரியர்:V பிரியா http://velscricketarangam.blogspot.in.& www.facebook.com\velsarenaofcricket



உங்களது ஊக்கமும் அங்கீகாரமும் மட்டுமே திறமையாளர்களை மென்மேலும் முன்னேற தூண்டும் போது, நீங்கள் ஏன் அவர்களை பாராட்டக்கூடாது? நன்மை செய்வதற்கு தடை ஏதும் இல்லை இங்கே!

திண்டுக்கல் கிரிக்கெட் (1 வது பிரிவு)

தயவு செய்து  தனியுரிமை மற்றும் நிபந்தனைகள்  படித்து விட்டுத் தொடரவும்!!!


திண்டுக்கல் கிரிக்கெட் 



DDCA 1வது பிரிவு 


TNCA - DDCA 1வது பிரிவு போட்டி:
முதலில் பேட் செய்த யுவராஜ் சிசி, பழனி அணி 38.3 ஓவரில் 242 ரன்கள் குவித்தது. N. காளிதாஸ் 66 ரன்களும், B. ஜெகதீஷ் ஆட்டமிழக்காமல் 63 ரன்களும், C. சிவசாமி 55 ரன்களும், M. செந்தில் வேலவன் 30 ரன்களும் எடுத்தனர். S. அம்ஜித் 49 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களும், N. நாச்சிமுத்து 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களும் வீழ்த்தினர். இரண்டாவது பேட் செய்த மன்சூர் அணி 28.1 ஓவரில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை தழுவியது. S. தினேஷ் பாபுஜி 40 ரன்களும், S. அம்ஜித் 33 ரன்களும் எடுத்தனர். S. குணசேகரன் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.



முடிவு: யுவராஜ் சிசி, பழனி அணி வெற்றி!!!



பதிப்பாசிரியர்:V பிரியா http://velscricketarangam.blogspot.in.& www.facebook.com\velsarenaofcricket




உங்களது ஊக்கமும் அங்கீகாரமும் மட்டுமே திறமையாளர்களை மென்மேலும் முன்னேற தூண்டும் போது, நீங்கள் ஏன் அவர்களை பாராட்டக்கூடாது? நன்மை செய்வதற்கு தடை ஏதும் இல்லை இங்கே!

திருச்சி கிரிக்கெட் (5 வது பிரிவு)

தயவு செய்து  தனியுரிமை மற்றும் நிபந்தனைகள்  படித்து விட்டுத் தொடரவும்!!!

திருச்சி கிரிக்கெட்

5 வது பிரிவு (TDCA)

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க சின்னம்
TDCA 


ஸ்கோர் விவரம்:
முதலில் பேட் செய்த வாரியர்ஸ் அவன்யூ அணி 29.5 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக M. மார்ஷ் -27 ரன்கள் எடுத்தார். இரண்டாவது பேட் செய்த ஜோனியன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிக பட்சமாக M. ராஜா 50 ரன்களும், K. ஸ்ரீனிவாசன் 26 ரன்களும், M. வெங்கடேசன் ஆட்டமிழக்காமல் 26 ரன்களும் எடுத்தனர்.

முடிவு: ஜோனியன்ஸ் அணி வெற்றி!!!




பதிப்பாசிரியர்:V பிரியா http://velscricketarangam.blogspot.in.& www.facebook.com\velsarenaofcricket



உங்களது ஊக்கமும் அங்கீகாரமும் மட்டுமே திறமையாளர்களை மென்மேலும் முன்னேற தூண்டும் போது, நீங்கள் ஏன் அவர்களை பாராட்டக்கூடாது? நன்மை செய்வதற்கு தடை ஏதும் இல்லை இங்கே!

இண்டர் காலேஜ் (திண்டுக்கல்)

தயவு செய்து தனியுரிமை மற்றும் நிபந்தனைகள் படித்து விட்டுத் தொடரவும்!!!


திண்டுக்கல் கிரிக்கெட்


திண்டுக்கல் DCA - இன்டெர் காலேஜ் கிரிக்கெட் 


போட்டி 1:
முதலில் பேட் செய்த RVS ஸ்கூல் ஆப் இன்ஜினீயரிங் அணி 25 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. D . ராஜ்குமார் 50 ரன்கள் எடுத்தார். M . விக்னேஷ் 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது பேட் செய்த ஸ்ரீ ஹயக்ரீவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 19.5 ஓவரில் 75 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது. D . ராஜ்குமார் 7 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். A. சிலம்பரசன் 10 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.


முடிவு: RVS ஸ்கூல் ஆப் இன்ஜினீயரிங் வெற்றி.





போட்டி 2:
முதலில் பேட் செய்த அரவிந்தர் பாலிடெக்னிக் அணி 13.5 ஓவரில் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. M. கருப்புசாமி 8 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இரண்டாவது பேட் செய்த GRU, காந்திகிராம் அணி 7.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 


முடிவு: GRU, காந்திகிராம் வெற்றி.


பதிப்பாசிரியர்:V பிரியா http://velscricketarangam.blogspot.in.& www.facebook.com\velsarenaofcricket





உங்களது ஊக்கமும் அங்கீகாரமும் மட்டுமே திறமையாளர்களை மென்மேலும் முன்னேற தூண்டும் போது, நீங்கள் ஏன் அவர்களை பாராட்டக்கூடாது? நன்மை செய்வதற்கு தடை ஏதும் இல்லை இங்கே!

முன்னுரை - 1

நன்றி! : செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகி, மேரில்போன் கிரிக்கெட் கிளப் 
காப்புரிமை: மேரில்போன் கிரிக்கெட் கிளப் (MARYLBONE CRICKET CLUB)


கிரிக்கெட் 250 வருடங்களாக ஒரு தொடர்ச்சியான விதிக்குறியீடுகளின் முலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இந்த குறியீடுகள் அவ்வப்போது அந்தந்த கால கட்டங்களில் அதன் நிர்வாகிகளால் திருத்தங்களுக்கு மற்றும் சேர்க்கைகட்கு உட்படுத்தபட்டன. கி.பி. 1787ம் வருடம் தோன்றிய மேரில்போன் கிரிக்கெட் கிளப் (MARYLBONE CRICKET CLUB (MCC)) இந்த குறியீடுகள் மற்றும் திருத்தங்கள் செய்யும் ஒரே அதிகாரியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கமே உலக காப்புரிமையை வைத்திருக்கிறது.




250 வருடங்களாக இந்த அடிப்படை கிரிக்கெட் விதிகள் குறிப்பிடத்தக்க வகையில் நின்று வந்துள்ளன. விளையாட்டு வீரர்கள் காலங்காலமாக விதிகளின்படி மட்டுமல்லாது உண்மையான விளையாட்டு உணர்வுடனும் விளையாட பயிற்சி மேற்கொள்வது தான் இதன் உண்மையான காரணமென்று கருதப்படுகிறது.




2000ம் ஆண்டு, MCC இந்த விதிகளை 20ம் நூற்றண்டிற்கேற்ப திருத்தி மீண்டும் எழுதியது. இந்த குறியீட்டின் முக்கியமான புதுமையானது விதிகளுக்கெல்லாம் முன்னுரையாக கிரிக்கெட் உணர்வை அறிமுகப்படுத்தியதுதான்.அதே சமயம் கடந்த காலங்களில் இது உள்ளடக்கமாக புரிந்து விளையாடும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. MCC, இந்த முன்னுரை முலம் கிரிக்கெட்டின் தனித்தன்மையையும் அனுபவத்தையும் தக்கவைக்க தெளிவான வழிகாட்டுதல் கிட்டும் என நம்பியது. அதுமட்டுமல்லாது குறிப்புகளை தவிர்க்கவும், அனைத்து புள்ளிகளையும் விதிகளுடன் இணைக்கவும், எங்கு அவசியமோ அங்கெல்லாம் தெளிவின்மையை போக்கவும், அணித்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடுவர்கள் அவர்கள் எந்த விளையாட்டு நிலைகளில் விளையாடினாலும் கிரிக்கெட்டை தொடர்ந்து அனுபவிக்கவும் இந்த புதுமை சேர்க்கப்பட்டது. MCC கிரிக்கெட்டின் ஆட்சிக் குழுவான சர்வதேச கிரிக்கெட் சபையின் (International Cricket Council (ICC) ) முழு உறுப்பினர்களிடம் பரவலாக ஆலோசனை நடத்தியது. மேலும் நடுவர் மற்றும் ஸ்கோரர் சங்கங்களுடன் நெருக்கமான ஆலோசனை செய்தது. அது மட்டுமல்லாது உலகின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நடுவர்களின் , விளையாட்டு வீரர்களின் கருத்தையும் இதில் சேர்த்துகொண்டது. 




இந்த சமீபத்திய பதிப்பு (கிரிக்கெட் விதிகள் 2000 குறியீடு ,4வது பதிப்பு - 2010), அக்டோபர் 2000 லிருந்து நடைமுறை பயன்பாடு மற்றும் அனுபவங்களிருந்து பல்வேறு அவசியமான சேர்க்கைகளை உட்கொண்டுள்ளது.




*முன்னுரை தொடரும் ...

பிரகடனம்


பிரகடனம் 


நடப்பு கிரிக்கெட் விதிகள், கிரிக்கெட் உலகில் நடக்கும் சுவாரஸ்யமான தகவல்கள், உள்நாட்டு கிரிக்கெட் மற்றும் செயல்பாடுகள்  ஆகியவற்றை எடுத்துக்காட்டப் போகும் வலைப்பதிவு இது.

இந்த வலைப்பதிவு பணம் சம்பாதிக்கவோ அல்லது கிரிக்கெட்டை வைத்து தொழில் செய்யவோ ஆரம்பிக்கப்பட்டதல்ல!

இந்த வலைபதிவில் இடம்பெறும் தகவல்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் உள்ள சிறந்த திறமைகளை உலகறிய உதவும்.

இந்த வலைபதிவில் இடம்பெறும் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் முழுக்க எனது சொந்த படைப்புகளே! மேலும் எவரையும் புண்படுத்தும் அல்லது அவமானப்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை.

மேலும் முடிந்தவரை பிறர் உரிமை கருத்துக்களுக்கு /தகவல்களுக்கு  அந்தந்த பதிவிலேயே உரிமையாளர் பற்றி குறிப்பிடப்படும்.

இந்த வலைப்பதிவு முழுமையாக எனது உடமை ஆகும். இதில் இடம்பெறும் தகவல்கள், படைப்புகள் எனது சொந்த பார்வையிலானவை என்றும் இதன் முலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வலைப்பதிவுக்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்.

இந்த வலைப்பதிவின் தரத்தினை உயர்த்த உங்களின் ஆலோசனைகளையும் விமரிசனங்களையும் வரவேற்கிறேன்.

இந்த வலைப்பதிவின் நோக்கமறிந்து ஊக்கம் தர வேண்டுகிறேன் .

என்றென்றும் நன்றியுடன்,
உங்கள் ,

Administrator of this blog
வேல்முருகன்

வேல்ஸ் (வேல்முருகன்).